சர்வதேச பெளத்த சம்மேளனம் நேற்று (31) பிற்பகல் கொழும்பு 07, பௌத்தலோக மாவத்தையில் “யுத்தம் வேண்டாம், அனைத்து மக்களுக்கும் அமைதியை கொடுங்கள்” என்று கூறி அமைதியான ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தது.
ஜாதி, மத பேதமின்றி இந்த அமைதிப் போராட்டத்தில் மகா சங்கத்தினர், இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மதத் தலைவர்கள் மற்றும் ஏராளமான சிங்கள, தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள் கலந்துகொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரும்பாலான மக்கள் கலந்துகொள்ளவில்லை என வதந்திகள் கிளம்பினாலும் பல தடைகளுக்கு மத்தியில் அனைத்து மதத் தலைவர்கள் மத்தியில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.