சவூதி விஷன் 2030 திட்டத்தின் கீழ் ஹஜ் ஏற்பாடுகள்: ஜனவரியில் முகவர்களை அழைத்து விளக்கமளிக்க ஏற்பாடு!

Date:

(காலித் ரிஸ்வான்)

இரு புனித மஸ்ஜித்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவுத் அவர்களின் ஆதரவின் கீழ், 3வது முறையாகவும் ஹஜ் மற்றும் உம்ரா சேவைகள் மாநாடு மற்றும் கண்காட்சியினை எதிர்வரும் 2024ம் ஆண்டு ஜனவரி 8 முதல் 11 வரை ஜித்தா சுப்பர்டோமில் சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சு ஏற்பாடு செய்து நடாத்தவுள்ளது.

இந்த ஹஜ் உம்ரா மாநாடு மற்றும் கண்காட்சியில் புகழ்பெற்ற அனுபவமிக்க அதிகாரிகள், தொழில்துறை வல்லுனர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தலைமையில் முன்னோடி தொழில்நுட்ப, அறிவியல் அமர்வுகள் மற்றும் உற்சாகமான பயிற்சிப் பட்டறைகள் போன்றவற்றை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இம் மாநாட்டின் முதன்மை நோக்கங்களில் ஒன்றாக சவூதி விஷன் 2030 இல் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள இலக்குகளுடன் இணைந்து, உலகெங்கிலும் உள்ள யாத்ரீகர்களுக்கு வழங்கப்படும் சேவைகளின் தரத்தை உயர்த்துவதும் காணப்படுகிறது.

இந்த மாநாட்டில் அமைச்சர்கள், உள்ளூர் மற்றும் சர்வதேச அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் நிபுணர்கள், தூதர்கள், உயர்ஸ்த்தானிகர்கள், சவூதி அரேபியாவிற்கான தூதுவர்கள் மற்றும் ஹஜ் மற்றும் உம்ரா வலையமைப்போடு செயல்படும் 200 க்கும் மேற்பட்ட அமைப்புகள் பங்கேற்கவுள்ளனர்.

சவூதி அரேபிய ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சர் தவ்ஸிக் பின் பவ்ஸான், இந்த நிகழ்வில் புனித யாத்திரை சேவைகளை வழங்குபவர்கள், அதிகாரிகள் மற்றும் சவூதி அரேபியாவிக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள பங்குதாரர்கள் ஒன்றிணைந்து யாத்ரீகர்களுக்கு உயர்தர சேவைகளை வழங்குவதில் சிறந்த நடைமுறைகளை கையாளுதல் பற்றி கலந்துரையாடும் என தெரிவித்தார்.

ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஹஜ் மற்றும் உம்ரா மாநாடு மற்றும் கண்காட்சியானது, உயர்மட்ட பேச்சாளர்கள், தொழில்துறை பண்டிதர்கள் மற்றும் தொழிலதிபர்கள் ஒன்றுகூடும் தளம் மாத்திரம் அல்லாமல் ஒவ்வொரு யாத்ரீகருக்கும் இணையற்ற சேவைகளை வழங்குவதற்கான சவூதி அரேபியாவின் துணிச்சலான லட்சியத்தை நிறைவேற்றுவதற்கான முழுமையான அர்ப்பணிப்பாகும்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...