தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் மரணம்: நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு

Date:

தொழிலதிபரான தினேஷ் ஷாப்டர் படுகொலை செய்யப்பட்டதாக கொழும்பு மேலதிக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதேநேரம் தினேஸ் ஷாப்டரின் மரணம் ஒரு குற்றச்செயல் எனக் கருதி இந்த வழக்கின் சந்தேகநபர்களை கைதுசெய்து உடனடியாக நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துமாறு சிஐடி பணிப்பாளருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கழுத்துப் பகுதி மற்றும் முகத்தின் மீது பிரயோகிக்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாகவே தினேஸ் ஷாப்டரின் மரணம் இடம்பெற்றுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரிகளின் அறிக்கை மற்றும் ஐந்து பேர் கொண்ட சிறப்பு மருத்துவக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் ஊர்ஜிதப்படுத்தப்பட்டதன் அடிப்படையில் கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இலங்கையின் பிரபல வர்த்தகராக கருதப்படும் தினேஸ் ஷாப்டர் கடந்த ஆண்டு இறுதிப்பகுதியில் பொரளை பொது மயானத்தில் கார் ஒன்றில் இருந்து குற்றுயிராய் மீட்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மூலம்: எம்.எப்.எம்.பஸீர்

Popular

More like this
Related

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க ஜனாதிபதி அறிவுறுத்தல்

அடுத்த இரண்டு நாட்களில் அதிக மழையுடன் மோசமான வானிலை உருவாகும் என...

சுமாத்ரா தீவுகளில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை?

இந்து சமுத்திரத்தில் 6.6 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய...

மோசமான வானிலை: ஜனாதிபதி தலைமையில் விசேட பேச்சுவார்த்தை!

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களை, ஜனாதிபதி அநுர...

அனர்த்த நிலைமைகளை அறிவிக்க தொலைபேசி இலக்கம்!

நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமைகள் காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு தேவையான நிவாரண உதவிகளை...