வை.எம்.எம்.ஏ. :மீலாத் கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா!

Date:

கொழும்பு – தெமட்டகொடை – அகில இலங்கை வை.எம். எம். ஏ. பேரவையின் மத விவகாரங்களுக்கான பிரிவினால், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் (மீலாத்) பிறந்த தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா, எதிர்வரும்  (04) சனிக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு, பேரவையின் பிரதான மண்டபத்தில் இடம்பெறும்.

பேரவையின் தேசியத் தலைவர் இஹ்ஸான் ஏ. ஹமீத் தலைமையில்,இந்த பரிசளிப்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது.

அகில இலங்கை ரீதியில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் இக்கட்டுரைப் போட்டிகள், மாணவ மாணவிகளுக்கு இடையில் நடாத்தப்பட்டன.

9 – 12 வயதுக்கு இடைப்பட்ட மற்றும் 13 – 16 வயதுக்கு இடைப்பட்ட மாணவ மாணவிகளுக்கு இப்போட்டிகளில் பங்கு பற்ற சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தன.

இவ்விழாவின்போது, முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்ற மாணவ மாணவிகளுக்கு, பெறுமதி மிக்க பரிசில்களும், பணப் பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்படவுள்ளன.

அத்துடன், இப்போட்டி நிகழ்வுகளில் கலந்து கொண்டு வெற்றி பெறாத மாணவ மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன. இச்சான்றிதழ்கள், அந்தந்த கிளைகளின் ஊடாக, மாவட்டப் பணிப்பாளர்களின் கண்காணிப்பின் கீழ் வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகளை, வை.எம்.எம்.ஏ. பேரவையின் தலைமையகம் மேற்கொண்டுள்ளது.

இப்பரிசளிப்பு விழா நிகழ்வில், பேரவையின் தேசியத் தலைவர் இஹ்ஸான் ஏ. ஹமீத், பேரவையின் கொழும்பு – கம்பஹா மாவட்ட பணிப்பாளர் நசாரி காமில் உள்ளிட்ட பேரவை மற்றும் மத்திய கொழும்பு கிளை உறுப்பினர்கள் பலரும் பங்கேற்கவுள்ளனர்.

( ஐ. ஏ. காதிர் கான்- மினுவாங்கொடை செய்தியாளர் )

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...