பங்களாதேஷிடமிருந்து இலங்கைக்கு சுமார் 58000 அமெரிக்க டொலர் பெறுமதியான மருத்துவ உதவி எதிர்வரும் வாரத்தில் வழங்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதன்படி, அவற்றில் இந்நாட்டுக்கு அத்தியாவசியமான 54 வகையான மருந்துகள் குறிப்பாக புற்றுநோய் மற்றும் சிறுநீரக மருந்துகள் உள்ளதாக இலங்கை பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன மற்றும் இலங்கை பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் Tareq Md Ariful Islam ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு அண்மையில் சுகாதார அமைச்சில் இடம்பெற்றது.
மருத்துவ உதவித் தொகைக்கு மேலதிகமாக பங்களாதேஷ் சுகாதார அமைச்சின் ஊடாக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மற்றுமொரு மருத்துவ உதவிப் பங்கும் எதிர்காலத்தில் பெறப்பட உள்ளதாகவும் உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு உடனடியாகப் பதிலளித்து இந்த மருந்துகளை நன்கொடையாக வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்த பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் மற்றும் பங்களாதேஷ் அரசாங்கத்திற்கு தனது விசேட நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.