யாழில் வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபட்டவர் கைது!!

Date:

யாழ்ப்பாணத்தில் பல்வேறு வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபட்டு இந்தியாவில் தலைமறைவாகியிருந்து விமானத்தில் பலாலி ஊடாக நாடு திரும்பிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபட்டு வெளிநாடுகளுக்கு தப்பித்த தேவா, பிரசன்னா ஆகியோரின் சகாவே இவ்வாறு கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (03) காலை இந்தியாவில் இருந்து விமானம் மூலம் பலாலி விமான நிலையத்தை வந்தடைந்த அவரை யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புபிரிவு பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் தெ.மேனன் தலமையிலான குழுவினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்பதனால் தேடப்பட்டு வந்த 27 வயதுடைய சந்தேக நபர் என்று பொலிஸார் கூறினர்.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் 75 மி.மீ. இற்கும் அதிக பலத்த மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல்  மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை ,...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....