அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்பில் அறிவிப்பு!

Date:

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போது, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பண்டிகை காலத்தில் அதிகளவிலான பொருட்களை இறக்குமதி செய்வது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலையை அதிகரிக்காமல், தற்போதைய விலை மட்டத்தில் அல்லது அதனை விட குறைந்த விலையில் வைத்து கொள்வதற்கான வேலைத் திட்டமொன்றை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தற்போது கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...