கிரிக்கெட்டின் தற்போதைய வீழ்ச்சிக்கு சங்காவும், மஹேலவுமே காரணம்: அர்ஜுன

Date:

இலங்கை கிரிக்கெட்டின் அழிவுக்கு கிரிக்கெட் நிர்வாக சபையே காரணம் என இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழுவின் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட்டை எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் பணிகள் இந்திய ஒப்பந்தக்காரர்களுக்கு ஏற்ற வகையில் நடைபெறுவதாக அர்ஜுன ரணதுங்க குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளதுடன், சாகல ரத்நாயக்கவின் ஊடாக கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையில் ஜனாதிபதி இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கிரிக்கெட்டின் தற்போதைய வீழ்ச்சிக்கு முன்னாள் வீரர்களான சங்கக்காரவும் மஹேல ஜெயவர்தனவுமே காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தான் விரும்பும் அணியுடன் கிரிக்கெட்டை கட்டியெழுப்ப அதிகாரம் வழங்கப்பட்டால், ஆறு மாதங்களுக்குள் மீண்டும் எமது கிரிக்கெட்டை கட்டியெழுப்ப தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் கிரிக்கெட்டைக் கட்டியெழுப்ப விரும்புவதாகவும், ஆனால் கிரிக்கெட் நிர்வாகக் குழு அதற்கு அனுமதிக்காது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...