இஸ்ரேலின் உள்விவகார அமைச்சர் மோஷே அர்பெல் (Moshe Arbel) மற்றும் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார ஆகியோருக்கு இடையில் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
குறித்த ஒப்பந்தத்தின் மூலம், 10,000 இலங்கைப் பண்ணைத் தொழிலாளர்களை உடனடியாக வேலைக்கு அமர்த்த இஸ்ரேல் அனுமதியளித்துள்ளது.
இஸ்ரேலிய நிறுவனங்களில் விவசாய துறைக்காக 5,000 தொழிலாளர்களை நாட்டுக்கு வரவழைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கடந்த வாரம் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்தன.
இந்த ஒப்பந்தத்தின் கட்டமைப்புக்கு அமைய முதல் கட்டமாக இலங்கை விவசாய தொழிலாளர்கள் எதிர்வரும் வாரங்களில் இஸ்ரேலுக்கு செல்லவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.