ரியாத் பத்ஹா தாவா நிலைய இஸ்லாமிய அழைப்பாளரும் இலங்கை காத்தான்குடி மௌலவி அபுல் ஹஸன் மதனி அவர்கள் எழுதிய ‘மரணித்தவரின் ஐந்து சொத்து உரிமைகள்‘ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று வியாழக்கிழமை (09) இரவு 8 மணியளவில் சவுதி அரேபியா ரியாதில் அமைந்துள்ள பத்ஹா ஜும்ஆ பள்ளிவாசல் வளாகத்தில் இடம்பெறவுள்ளது.
இவ்விழாவில் சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் பக்கீர் முஹைதீன் அம்சா கலந்துகொண்டு இந்த புத்தகத்தை வெளியீட்டு வைக்கவுள்ளார்.