கடந்த 2 மாதங்களில் 299 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள்!

Date:

கடந்த இரு மாதங்களில் சிறுவர் பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் அதிர்ச்சியூட்டும் வகையில் அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக பொலிஸ் மகளிர் மற்றும் சிறுவர் பணியகம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின் ஊடாக தெரியவந்துள்ளது.

இதன்படி, கடந்த ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் 16 வயதுக்குட்பட்ட 131 சிறுமிகள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

பொலிஸ் மகளிர் மற்றும் சிறுவர் பணியகத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர செய்தியாளர் சந்திப்பொன்றில் இந்த விபரங்களை வெளியிட்டுள்ளார்.

131 பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை கவலையளிப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களில் 10 சிறுமிகள் தற்போது கர்ப்பம் தரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க கருத்து வெளியிடுகையில், செப்டெம்பர் மாதத்தில் மாத்திரம் 16 வயதுக்குட்பட்ட 168 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும், அவர்களில் 22 சிறுமிகள் கர்ப்பம் தரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இந்த பாரதூரமான பிரச்சினையை தீர்க்க பயனுள்ள நடவடிக்கைகளின் அவசரத் தேவையையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...