பலஸ்தீன விவகாரத்தில் உலகின் தோல்வியும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களும் எனும் தலைப்பில் கலந்துரையாடலொன்றினை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிகழ்வு நாளை புதன்கிழமை பி.ப 5மணிக்கு கொழும்பு டி.ஆர்.விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ள இலங்கை தபாலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் கலாநிதி சுஹைர் எம்.எச்.செய்ட் இலங்கை ஜ.நா அலுவலக முன்னாள் தேசிய தகவல் அதிகாரி மொஹான் சமரநாயக்க சமூக ஆர்வலர் எம்.என். முஹம்மட் ஆகியோர் விசேட பேச்சாளராக கலந்துகொள்வர்.
மேலும் இந்த முக்கியமான உலகளாவிய பிரச்சினை தொடர்பான கலந்துரையாடலில் இன,மத பேதமின்றி அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலதிக விபரங்களுக்கு என்.எம். அமீன் 0772612288 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.