விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ரொஷான் ரணசிங்கவுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதால் அவரது பாதுகாப்பை பலப்படுத்த பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அமைச்சர் ஒருவரின் பாதுகாப்புக்காக குறைந்தப்பட்டசம் ஏழு பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
அமைச்சர் ஒருவருக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக கோரிக்கை விடுக்கப்படும் சந்தர்ப்பத்தில் அவரது பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
விளையாட்டுத்துறை அமைச்சரின் பாதுகாப்புக்கு கூடுதலாக மூன்று பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தற்போது அவரது பாதுகாப்புக்காக 10 பொலிஸ் அதிகாரிகள் உள்ளனர்.
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு இதற்கான ஒப்புதலை அளித்துள்ளது.“ என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் கூறினார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்ற ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகள் தொடர்பில் அமைச்சர் ரொஷான் ரணசிங்க, அண்மையில் அம்பலப்படுத்தியதால், தனக்கு பல்வேறு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சில் முறைப்பாடு அளித்துள்ள பின்புலத்திலேயே தற்போது அவரது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.