பல்வேறு தளங்களிலும் செயற்பட்டு வருகின்ற முஸ்லிம் சமூக நிறுவனங்களுக்கிடையில் அறிமுகத்தை ஏற்படுத்தும் வகையிலான சந்திப்பொன்று கடந்த வியாழனன்று (16) கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா இஸ்லாமிய நிலையத்தில் நடைபெற்றது.
பஹன மீடியா மற்றும் மீட்ஸ் திட்டங்களின் தலைவர் அஸ்-ஸெய்யித் ஸாலிம் ரிபாய் மௌலானா, ஐக்கிய நாடுகள் சமாதான தூதுவர் பேரவையின் உறுப்பினரும் தேசிய ஐக்கியத்திற்கான சர்வமத கூட்டமைப்பின் முஸ்லிம் விவகார சம-தலைவருமான அஷ்-ஸெய்யித் கலாநிதி ஹஸன் மௌலானா அல்-காதிரி, பஹன மீடியாவின் முகாமைத்துவப் பணிப்பாளர் அஷ்- அப்துல் முஜீப் கபூரி உள்ளிட்ட பலரின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ். அர்கம் நூரமித், ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன், அகில இலங்கை ஸூபி தரீக்காக்களின் சுப்ரீம் கவுன்சில் தலைவர் அஸ்-ஸெய்யித் நகீப் மௌலானா, தப்லீக் ஜமாத் அங்கத்தவர் அஷ்- அப்துல் ஹமீத் மஹ்தி, இலங்கை ஷரீஆ கவுன்சில் தலைவர் கலாநிதி தேசமான்ய மௌலவி ஹஸ்புல்லாஹ் அப்துல் காதிர் பஹ்ஜி, ஸ்ரீலங்கா ஜமாஅதே இஸ்லாமி அமீர் உஸ்தாத் அஷ்.உஸைர் இஸ்லாஹி, அகில இலங்கை சுன்னத் ஜமாஅத் மஜ்லிஸுல் உலமா சபை பொதுச் செயலாளர் அஷ்- ஸிறாஜ் நஜாஹி, ஸலாமா தலைவர் அஷ். ஆஸாத் அப்துல் முஈத், அகில இலங்கை சூஃபிஸ ஆன்மீக பேரவையின் தலைவர் அஷ்- அப்துல்லாஹ் நூரி, அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் தலைவர் ஷாம் நவாஸ், ஹஜ் குழுத் தலைவர் இப்ராஹிம் அன்ஸார், பொரல்ல அஹதியா இஸ்லாமிய கல்வி நிலையத்தின் தலைவர் ஷிப்லி ஹாஷிம், கொழும்பு பெரிய பள்ளிவாசல் தலைவர் தாஹிர் ரஸீன், இலங்கை கதீப் முஅஸ்ஸின் சங்கத் தலைவர் மௌலவி அப்துல் ஜப்பார், ஸ்ரீ லங்கா இஸ்லாமிய நிலையத்தின் பணிப்பாளர் அஷ்- ஸzரூக், அஸ்ஸுன்னா ட்ரஸ்ட் பொதுச் செயலாளர் பேராசிரியர் இன்திகாப் ஸுபர், தஃவதே இஸ்லாமி ஆலோசகர் அஷ்- தாஜுல் முனீர் காதிரி அத்தாரி, மலே சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG) மாஹின் டூல் ஆகியோருடன் மேற்குறித்த சில நிறுவனங்களின் அங்கத்தவர்களும், அகில இலங்கை வை.எம்.எம்.ஏ, மீட்ஸ், மிஷ்காத், வக்ப் சபை ஆகியவற்றின் பிரதிநிதிகளும் மற்றும் நிவ்ஸ்நவ் இணையத்தளத்தின் பிரதம ஆசிரியர் பியாஸ் முஹம்மத், டாக்டர் ஸzனீக் உள்ளிட்ட மற்றும் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
குறித்த தினத்தில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமல் போன அகில இலங்கை மஸ்ஜித் சம்மேளனம், தேசிய ஷூறா கவுன்சில், யுனைடட் தெளஹீத் ஜமாத் ஆகிய அமைப்புகள் இனிவரும் சந்திப்புக்களில் கலந்து கொண்டு தமது பங்களிப்பை வழங்கத் தயாராக இருப்பதாக அறிவித்திருந்தன.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த பலரும் ஒரே குரலில் முஸ்லிம்களின் பிரச்சினைகளை முன்வைப்பதன் அவசியம் குறித்து கருத்து வெளியிட்டனர்.
இனிவரும் காலங்களில் முஸ்லிம் சமூகத்துக்குப் பொதுவான பிரச்சினைகளை ஒவ்வொன்றாகக் கலந்துரையாடி உரிய இடங்களுக்கு ஒரே குரலில் முன்வைப்பது எனவும் இந்தச் சந்திப்பின் போது தீர்மானிக்கப்பட்டது.