பாலியல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் பதவியை இராஜினாமா செய்வேன்: ரஞ்சித் பண்டார

Date:

தமக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பாலியல் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டை வன்மையாக மறுப்பதாக கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் தாம் இல்லாத நேரத்தில் இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைத்ததன் மூலம் உறுப்பினர் என்ற வகையில் தமது சிறப்புரிமை பாரியளவில் மீறப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் சபாநாயகருக்கு எழுத்துமூலம் அறிவித்தல் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதற்கமைய, சிறப்புரிமைக் குழுவின் முன்னிலையில் உரிய குற்றச்சாட்டை ஆராயுமாறும் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.

குறித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் தாம் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

அத்துடன், குற்றச்சாட்டை முன்வைத்த உறுப்பினர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் தமது சிறப்புரிமைகளை மீறிய குற்றத்திற்காக தண்டிக்கப்பட வேண்டும் எனவும் ரஞ்சித் பண்டார மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...