இஸ்ரேல் சிறையிலிருந்து விடுதலையானவர்களை வானவேடிக்கையுடன் வரவேற்ற மக்கள்!

Date:

ஹமாஸ்- இஸ்ரேல் இடையில் நான்கு நாட்களுக்கு தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இந்த நான்கு நாட்களில் ஹமாஸ் பிடித்து வைத்திருக்கும் பணயக்கைதிகளில் 50 பேர் விடுதலை செய்ய வேண்டும். அதேவேளையில் இஸ்ரேல் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 150 பலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். இதுதொடர்பாக ஹமாஸ்- இஸ்ரேல் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாக போர் நிறுத்தம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து நேற்று தாய்லாந்தை சேர்ந்த 12 பேர், இஸ்ரேலைச் சேர்ந்த 13 பேர் என 25 பேரை ஹமாஸ் அமைப்பினர் விடுதலை செய்தனர்.

அதேவேளையில் இஸ்ரேல் சிறையில் உள்ள 39 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இதில் 25 பேர் பெண்கள், 14 பேர் இளைஞர்கள். இஸ்ரேல் இராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியமைக்காக இவர்கள் கைது செய்யப்பட்டார்கள்

33 பேர் மேற்கு கரையில் உள்ள சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 6 பேர் ஜெருசலேமில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த தகவலை சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் குழு தெரிவித்துள்ளது.

விடுதலை செய்யப்பட்டதும் சிறையில் இருந்து வெளியே வந்த பெண்களை தங்களது குடும்பத்தினருடன் இணைந்தனர். அப்போது, ஆனந்த கண்ணீருடன் அவர்களை வரவேற்றனர். இளைஞர்களை தோளில் தூக்கி சந்தோசத்தை வெளிப்படுத்தினர். தெருக்களில் ஆயிரக்கணக்கானோர் கூடி வாணவேடிக்கை நிகழ்த்தி சந்தோசத்தை வெளிப்படுத்தினர். அப்போது பலர் தங்களது கைகளில் பலஸ்தீன கொடிகளையும், சிலர் ஹமாஸ் கொடியையும் வைத்திருந்தனர்.

இஸ்ரேல் சிறையில் இருந்து மொத்தம் 150 பேர் விடுதலை செய்யப்பட இருக்கிறார்கள். 250 பணயக்கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்யும்போது சுமார் ஆயிரம் பேர் இஸ்ரேல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

பணயக்கைதிகள்- கைதிகள் பரிமாற்றத்தில் கட்டார் முக்கிய பங்குவகித்தது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...