வங்கிக் கணக்கு ஊடாக போதைப்பொருள் வர்த்தகம் – தாயும் மகனும் 5 கோடி ரூபா பணத்துடன் கைது!

Date:

போலியான அடையாள அட்டை மற்றும் முகவரியை வழங்கி வங்கிக் கணக்கு ஊடாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட தாயும், மகனும் 5 கோடி ரூபா பணம் மற்றும் தங்க நகையுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் வர்த்தகம் ஊடாக பெற்றுக்கொண்ட 5 கோடியே 11இலட்சத்து 12ஆயிரத்து 500 ரூபா பணம் மற்றும் தங்க வளையலுடன் சந்தேகநபரும், அவரது தாயும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

34 மற்றும் 67 வயதுகளையுடைய சந்தேக நபர்கள் இருவரும் அலுபோமுல்ல பமுனுகம பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், பண்டாரகம பகுதியில் உள்ள தனியார் வங்கியொன்றுக்கு வருகை தந்தபோது கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் தொடர்பான கொடுக்கல் வாங்கல்களைப் வங்கிக் கணக்குகள் ஊடாக மேற்கொண்டமை குறித்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியக அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வங்கியில் கணக்கு வைத்திருப்பவரின் விபரங்களை விசாரித்தபோது போலி அடையாள அட்டை மற்றும் போலி முகவரி மூலம் கணக்குகள் தொடங்கப்பட்டது தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...