“நியூஸ் நவ்” இன் ஐந்து வருட பூர்த்தியை முன்னிட்டு school of excellence ல் நடைபெற்ற ஊடகக் கருத்தரங்கு!

Date:

‘தொடர்பாடல் நுட்பங்களும் செயற்கை நுண்ணறிவும்’ என்ற தலைப்பிலான ஊடகக் கருத்தரங்கு கடந்த வியாழக்கிழமை (23) புத்தளம் மதுரங்குளியில் உள்ள எக்ஸலன்ஸ் கல்லூரியில் நடைபெற்றது.

பஹன மீடியா அகடமியானது அதன் சகோதர நிறுவனமான ‘நியூஸ்நவ்’ செய்தித் தளத்தின் 5 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்வின் அதிதிகளாக அருட்தந்தை யொஹான் ஜெயராஜ், மற்றும் பஹன நிறுவன முகாமைத்துவ பணிப்பாளர் அஷ்ஷெய்க் முஜீப் சாலிஹ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

மேலும், தகவல் திணைக்களத்தின் தகவல் அதிகாரி பவாஸ் அன்பியா,’மாத்திய கீர்த்தி’ ஹில்மி முஹம்மத், ஆகியோர் வளவாளர்களாக கலந்து சிறப்பித்தனர்.

‘தொடர்பாடல் நுட்பங்களும் செயற்கை நுண்ணறிவும்’ என்ற தலைப்பில் நடைபெற்ற இப்பயிற்சி கருத்தரங்கில் சுமார் 120 உயர் கல்வி மாணவ மாணவிகள் கலந்து சிறப்பித்தனர்.

அத்துடன் இப்பயிற்சி கருத்தரங்கில் கலந்துகொண்ட மாணவ மாணவிகளுக்கு எக்ஸலன்ஸ் கல்லூரியின் அதிபர் எச், அஜ்மல் தலைமையில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

இதன்போது புத்தளம் பாத்திமா கல்லூரி அதிபர் சரீனா அஜ்மல் மற்றும் இப்பயிற்சி கருத்தரங்கின் இணைப்பாளர்களாக செயற்பட்ட ஆசிரியர்களான சைபுடீன், அக்ஷா ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட பஹன மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் அஷ்ஷெய்க் முஜீப் சாலிஹ் உரையாற்றும் போது,

“இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறும் எண்ணத்தை கைவிட்டு நீதியாகவும், நேர்மையாகவும், நாட்டிற்கு சேவை செய்வதற்கு தங்களை அர்ப்பணிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

மேலும் தொடர்பாடல் நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடர்பாக உங்களுக்கு அறிவூட்டும் பயற்சி வழங்கிய பஹன மீடியா தனியார் நிறுவனம் தூய இலங்கையைக் கட்டியெழுப்பும் உன்னத இலட்சியத்துடன் ஆரம்பிக்கப்பட்டதாகும்.

இந்த சிந்தனையை மேலோங்கச் செய்ய ஒரு தனியான ஊடக நிறுவனத்தின் மூலம் மட்டும் செயல்பட முடியாது, மாணவர்களையும் மார்க்க அறிஞர்களையும் அறிவூட்டி வளப்படுத்தும் நோக்கில் நாம் பஹன அகடமியையும் ஆரம்பித்துள்ளோம். சமூக ஊடகத்தின் மூலம் மட்டுமல்லாது பிரசுரங்களையும் வெளியிட்டு வருகிறோம் எனக்கூறினார்.

இதேவேளை அருட்தந்தை யொஹான் ஜெயராஜ், செயற்கை நுண்ணறிவானது எதிர்கால சந்ததியினருக்கு மிகவும் பயனுள்ள ஒரு தொடர்பாடல் நுட்பமாகும் ,இதன் அவசியத்தை காலம் செல்லச் செல்ல நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.

நாங்கள் தற்போது முகப்புத்தகங்களுடாக செயற்கை நுண்ணறிவின் தாக்கங்களை அறிந்துகொள்கிறோம். இந்த நுட்பத்தினால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் மட்டுமல்லாது உயர்ந்த பயன்பாடுகளையும் எமக்கு அறியக் கூடியதாக உள்ளன.

இந்த நுட்பத்தின் மூலம் நீங்கள் மனிதனுக்குப் பயனுள்ளவற்றை முன்வைக்கும் போது மட்டும் இதன் சிறப்பை உலக மக்கள் உணர்வார்கள் என்றார்.

நிகழ்வின் இறுதியில் பங்குபற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...