பலஸ்தீன் மக்களின் சுயநிர்ணய உரிமையை தொடர்ந்து பாதுகாப்போம்: புதிய பொலிவிய வெளியுறவு அமைச்சர்

Date:

பலஸ்தீன விவகாரத்தையும் பலஸ்தீனிய மக்களையும் அவர்களின் சுயநிர்ணய உரிமையையும் தொடர்ந்து பாதுகாப்போம் என பொலிவியா நாட்டின் புதிய வெளிவிவகார அமைச்சர் செலிண்டா சோசா, நேற்று உறுதியளித்துள்ளார்.

|இடதுசாரி ஜனாதிபதியான அந்நாட்டின்  லூயிஸ் ஆர்ஸ் முன்னிலையில் பதவியேற்பு விழாவின் போதே ,வெளிவிவகார அமைச்சர் செலிண்டா சோசா  இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதன்போது, தனது புதிய பதவியின் மூலம், பலஸ்தீன மக்களை தொடர்ந்து பாதுகாப்பேன், நாங்கள் பலஸ்தீனிய மக்களையும் அவர்களின் சுயநிர்ணய உரிமை அவர்களின் சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட அரசையும் உருவாக்குவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

காசா பகுதிக்கு எதிரான ஆக்கிரமிப்பைக் கண்டித்து பொலிவியா கடந்த அக்டோபர் மாத இறுதியில் இஸ்ரேலுடனான தனது இராஜதந்திர உறவுகளைத் துண்டித்தது.

இதேவேளை பொலிவியாவைப் போலவே, கரீபியன் நாடான பெலிஸ் இராச்சியம், இஸ்ரேலுடனான தனது இராஜதந்திர உறவுகளை இம்மாத நடுப்பகுதியில் துண்டிப்பதாக அறிவித்தது.

கொலம்பியா, சிலி மற்றும் ஹோண்டுராஸ் ஆகியவை காசாவிற்கு எதிராக இஸ்ரேலிய ஆக்கிரமிப்புகளின் பின்னணியில் ஆலோசனைக்காக டெல் அவிவில் இருந்து தங்கள் தூதர்களை திரும்ப அழைத்தன.

1983 ஆம் ஆண்டில், நாட்டின் மிக முக்கியமான தொழிற்சங்கங்களில் ஒன்றாகக் கருதப்படும் ‘பொலிவியா விவசாயிகளின் ஐக்கிய ஒன்றியத்தின்’ தலைமைப் பொறுப்பை ஏற்கும் முன், தென் மாகாணமான டாரிஜாவில் விவசாயப் பெண்களின் ஒன்றியத்தை நிறுவுவதில் செலிண்டா சோசா பங்கேற்றார்.

அதேநேரம், 2006 மற்றும் 2007 க்கு இடையில், நாட்டின் பழங்குடி மக்களில் இருந்து வந்த ஜனாதிபதி ஈவோ மோரல்ஸின் (2006-2019) கீழ் செலிண்டா  உற்பத்தி அமைச்சராககவும் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தலைமுறை அடிப்படையில் புகையிலைக்கு தடை விதித்த மாலைதீவு

மாலைதீவு நாட்டில் 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி...

இஸ்ரேலில் இருந்து 45 பலஸ்தீனர்கள் உடல்கள் ஒப்படைப்பு!

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பணயக் கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல்...

உயர்தர வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவு முதல் தடை!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை டிசம்பர் 10 ஆம் திகதி...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு...