ஐக்கிய நாடுகள் பலஸ்தீன ஒருமைப்பாட்டு தினம் தற்போது BMICH இல்….!

Date:

சர்வதேச பலஸ்தீன் ஒருமைப்பாட்டு தினம் இன்று (29) ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது.

இத்தினத்தையொட்டி இலங்கை பலஸ்தீன் ஒரு­மைப்­பாட்டு இயக்கம் ஏற்பாடு செய்த நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்திலுள்ள லோட்டஸ் அரங்கில்  இடம்பெறுகிறது.
‘பலஸ்தீனுக்கு நீதி’ எனும் தொனிப் பொருளில் இடம்பெறும் இந்த கருத்தரங்கில் (Asia pacific coordinator of the boycott, divestment, sanctions) புறக்கணிப்பு, ஒதுக்கி வைத்தல், பொருளாதாரத் தடைகள் ஆகியவற்றின் ஆசிய பசிபிக் ஒருங்கிணைப்பாளர் அபூர்வ கௌதம் உரை நிகழ்த்துகிறார்.

மேலும் இக்கருத்தரங்கில் ஜக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர், தூதரக இராஜதந்திரிகள்,இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் சுஹைர் ஹம்தல்லா செயிட்,  பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...