குருநாகலை, தும்மலசூரிய ஆரிகாமத்தில் அடங்கப் பெற்றுள்ள மகான் அஷ்ஷெய்க் அஸ்ஸெய்யித் இஸ்மாஈல் ஆரிப் வலியுல்லாஹ் அவர்களின் பெயரிலான 111 ஆவது உரூஸ் முபாரக் தமாம் மஜ்லிஸ் இன்று (02) பிற்பகல் 4.00 மணிக்கு ஆரம்பமாகும்.
இன்றைய தினம் இரவு 11.00 மணி வரை நடைபெறும். இந்நிகழ்வின் இறுதி நிகழ்வுகள் நாளை காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகி பகல் 1.00 மணிக்கு நிறைவு பெறும்.
இந்நிகழ்வில் அமைச்சர் சாந்த பண்டார, பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி சரத் வீரசேகர, சுதத் மஞ்சுள, நளின் பண்டார ஜயமகா, கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் கலீலுர் ரஹ்மான், அகில இலங்கை சூபி ஆன்மீகப் பேரவையின் சட்ட ஆலோசகர், மனித உரிமைகள் செயற்பாட்டாளர் சட்டத்தரணி சம்பத் தென்னகோன் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொள்ளவுள்ளதோடு நபிகள் நாயகத்தின் குடும்பத்தாரும் கலந்து கொள்ளவுள்ளதாக அகில இலங்கை சூபி ஆன்மீகப் பேரவை தெரிவித்துள்ளது.
அல்ஹாஜ் அஸ்ஸெய்யித் அலி ஸாஹிர் மௌலானா அல்காதிரி, அல்ஹாஜ் அஸ்ஸெய்யித் கலாநிதி ஹஸன் மௌலானா அல்காதிரி, அல்ஹாஜ் அஸ்ஸெய்யித் மர்ஸூம் மௌலானா அல்காதிரி, அல்ஹாஜ் அஸ்ஸெய்யித் இர்பான் மௌலானா அல்காதிரி, அல்ஹாஜ் அஸ்ஸெய்யித் ஹனீப் மௌலானா அல்காதிரி ஆகியோர் சிறப்பு அதிதிகளாகக் கலந்து கொள்ளவுள்ளனர்.