பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்:சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது

Date:

பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவானது.

பிலிப்பைன்ஸின் மிண்டானா நகர் அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்குள்ள வீடுகள் குலுங்கின.

இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

பிலிபைன்ஸ்சில் கடந்த மாதம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவான நிலநடுக்கத்தால் அங்கு உயிர்சேதமும் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் அங்கு 8 பேர் பலியாகினர். இந்த நிலையில், மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது மக்களை பீதியில் உறைய வைத்துள்ளது.

முன்னதாக இந்தோனேசியாவின் கெபுலாவான் பாபர் பகுதியில்  5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்து வெளியிட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகியதால் முதலில் இந்த நிலநடுக்கத்திற்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

ஆனால் பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், ஜப்பான், இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளில் ஒரு சில இடங்களில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது அங்குள்ள மக்கள் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. காரணம் என்னவென்றால் கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம்  திகதி ஏற்பட்ட நிலநடுக்கம் தான்.

இந்த நிலையில் தான் தற்போது மீண்டும் பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து இந்தோனேசியா, ஜப்பான், மலேசியாவுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...