ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனருமான பில் கேட்ஸ் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
ஐக்கிய நாடுகளின் 28 ஆவது காலநிலை மாற்றங்கள் தொடர்பிலான “COP28” உயர்மட்ட மாநாடு டுபாய் எக்ஸ்போ சிட்டியில் நடைபெற்று வருகிறது.
இந்த மாநாட்டில் 54 அரச தலைவர்களும், உலகளாவிய முக்கிய பிரதிநிகளும் கலந்துகொண்டுள்ளனர்.
இந்நிலையில், “COP28” உச்சி மாநாட்டில் கலந்துகொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பில்லியனர் பில் கேட்ஸுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது, உலகளாவிய சவால்கள் மற்றும் வெப்ப மண்டலத்தில் இலங்கையின் சாத்தியமான தலைமைத்துவம் குறித்து கலந்துரையாடப்படதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.