தேசிய மக்கள் சக்தியின் மகளிர் பிரிவினர் நடத்திய போராட்டம் மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
பாராளுமன்ற சுற்றுவட்ட பகுதியில் இன்று காலை இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் வாழக்கைச்செலவு, மக்கள் மீதான தாங்கமுடியாத வரிச்சுமை மற்றும் நாட்டில் நிலவும் ஏனைய பிரச்சினைகளுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தியின் மகளிர் பிரிவின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், பத்தரமுல்லை – பொல்துவ பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.