ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து இலங்கைக்கு 600 மில்லியன் டொலர்கள் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிரேஷ்ட அதிகாரியொருவரை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணை கிடைத்த பின்னர் தவணை முறையில் இந்த தொகை பெற்றுக் கொள்ளப்படும் என அந்த செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.