அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது சந்தை வீதியில் அமைந்துள்ள 3 மாடி கட்டடம் ஒன்றில் நடாத்தப்படும் மத்ரஸா ஒன்றில் சடலமாக மீட்கப்பட்ட மத்ரசா மாணவனின் மரணமானது ஒரு கொலை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று முன் தினம் (5) மாலை நேரம் சாய்ந்தமருது மத்ரஸா ஒன்றில் உயிரிழந்த காத்தான்குடி மாணவனின் மரண விசாரணை இன்று இடம்பெற்ற நிலையில் குறித்த மரணமானது ஒரு “கொலை” என உறுதி செய்யப்பட்டுள்ளதாக தற்போது தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி மத்ரஸா அதிபர் (மெளலவி) சஹ்னாஸ் என்பவரால் தாக்குதலுக்கு உள்ளாகியே குறித்த 13 வயது மாணவன் உயிரிழந்திருக்கக்கூடுமென மக்கள் மத்தியில் நிலவி வந்த சந்தேகம் இப்போது “கொலை” என உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த மாணவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர்கள் தெரிவித்தையடுத்து இன்று (07) நடைபெற்ற பிரேத பரிசோதனையின் பின்னர் இம் மாணவனின் மரணம் “கொலை” என சட்ட வைத்திய அதிகாரிகளினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.