நாட்டில் மின்சார வாகன இறக்குமதிக்கு அனுமதி !

Date:

நாட்டில் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வெளிநாட்டு ஊழியர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்

பாராளுமன்றில் நேற்று(07) இடம்பெற்ற தொழில் அமைச்சு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 900 மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த முறைமையின் மூலம் 100 மில்லியன் டொலர்களுக்கு மேல் வெளிநாட்டு ஊழியர்களால் நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் எனினும், இந்த வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் முறைக்கான கடன் கடிதங்களை விநியோகிப்பதில் சில நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

திறைசேரி உத்தியோகத்தர்களின் செயற்பாடுகளினால் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Popular

More like this
Related

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம் திறப்பு

நாட்டிற்கு வருகை தருகின்ற வெளிநாட்டவர்களுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம்...

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...