மலையக ரயில் சேவைகள் பாதிப்பு!

Date:

தெமோதர மற்றும் ஹாலிஎல ரயில் நிலையங்களுக்கு இடையில் இன்று (09) காலை ரயில் பாதையில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததன் காரணமாக மலையக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ரயில் பாதையை விரைவில் சீரமைக்கும் பணியை ரயில்வே ஊழியர்கள் ஏற்கனவே தொடங்கி விட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக மலையகப் பாதையில் ரயில்களை இயக்குவதில் தாமதம் ஏற்படக்கூடும் எனவும் நாவலப்பிட்டி ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

இந்த நாட்களில் மழையுடன் கூடிய காலநிலை நிலவுவதால், மலையக ரயில் மார்க்கத்தில் அடிக்கடி மண்சரிவு ஏற்படுவதால் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

நான்கு இலட்சத்தை கடந்த தங்க விலை!

இலங்கை வரலாற்றில் 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று...

மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும்...

போதைக்கு அடிமையானவர்கள் தமது விருப்பத்துடன் புனர்வாழ்வு பெற நடவடிக்கை

போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தமது விருப்பத்துடன், புனர்வாழ்வு பெறக்கூடிய பத்து மையங்கள்...

கட்டுநாயக்க விமான நிலைய Check-in நேரத்தில் மாற்றம்

இன்று (17) நண்பகல் 12.00 மணி முதல் அமுலாகும் வகையில் கட்டுநாயக்க...