சமூக ஊடகங்களை துஷ்பிரயோகம் செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்: சிரேஷ்ட சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா!

Date:

சமூக ஊடகங்களில் தனது குரலைப்போன்று போலியான குரலைப் பதிவு செய்து தனக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் குரல் பதிவை பதிவு செய்தவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் பொருட்டு பிரபல  குழந்தைகள் நல சிகிச்சை நிபுணர் டாக்டர் ரயீஸ் முஸ்தபா அவர்கள் இன்று சிரேஷ்ட சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா அவர்களை  சந்தித்துள்ளார்.

இச்சந்திப்பின் போது தனக்கு ஏற்பட்ட அபகீர்த்திக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் கருத்து தெரிவித்த சட்டத்தரணி பைஸ் முஸ்தபா அவர்கள்,

சமூக ஊடகங்கள் மூலமாக அமைதியான முறையில் சமூகத்திற்காக பணியாற்றுகின்ற சமூகத்தலைவர்களை  அவமானப்படுத்துவபவர்களுக்கு எதிராகவும் சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுப்பதற்காக அதற்காக தன்னுடைய முழுமையாக பங்களிப்பை வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

சாய்ந்தமருது மத்ரஸா மாணவனின் மரணத்தை தொடர்ந்து இலங்கையிலுள்ள அரபுக்கல்லூரிகள் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் கருத்தாடல்களும் முன்வைக்கப்பட்டு வரும் சூழலில்  டாக்டர் ரயீஸ் முஸ்தபா அவர்கள் மத்ரஸாக்கள்,  ஆலிம்கள் தொடர்பில் தவறான தகவல்களை கூறியதாக சமூக ஊடகங்களில் பரலாக செய்திகள் பகிரப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...