‘இதுவரை மின்தடை தொடர்பான முழுமையான அறிக்கை இதுவரை கிடைக்கப்பெறவில்லை’

Date:

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பிலான முழுமையான அறிக்கை இதுவரை கிடைக்கப்பெறவில்லை என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த அறிக்கை எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கப்பெறுமென எதிர்பார்ப்பதாக ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் மஞ்சுல பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்னர், மின்சார சபையின் உயரதிகாரிகளை ஆணைக்குழு முன்னிலையில் அழைத்து காரணங்களைக் கேட்டறிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சனிக்கிழமை(09) மாலை 05.10 மணி அளவில் நாடளாவிய ரீதியில் மின்வெட்டு ஏற்பட்டது. சுமார் ஐந்தரை மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் மின்விநியோகத்தை வழமைக்குக் கொண்டுவர முடிந்ததாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

கொத்மலை – பியகம மின்விநியோக கட்டமைப்பில் மின்னல் தாக்கமே மின்வெட்டு ஏற்படக் காரணம் என மின்சார சபை பின்னர் தெரிவித்திருந்தது.

Popular

More like this
Related

காசா படுகொலைக்கு எதிராக சென்னையில் மாபெரும் போராட்டம்

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் மக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக சென்னையில் போராட்டம் நடைபெற்றது. பலஸ்தீனத்தில்...

வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை...

அஷ்ரப் மருத்துவமனையில் கட்டண வார்டை திறந்து வைத்த சுகாதார அமைச்சர்

கல்முனை அஷ்ரப் நினைவு மருத்துவமனையின் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு பகுதியாக...

“Disrupt Asia 2025”: டிஜிட்டல் பொருளாதாரமும் புத்தாக்கத்தையும் முன்னிறுத்தும் மாநாடு

நாட்டின் முன்னணி புதிய தொழில்முனைவோர் மாநாடு மற்றும் புத்தாக்க விழாவான “Disrupt...