“வரி செலுத்தாதவர்கள் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும்” என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
”நாட்டில் பொருளாதாரம் முழுமையாக வீழ்ச்சியடைந்து காணப்படும் ஒரு சந்தர்ப்பத்தில் இந்த வரி திருத்தங்களை பொதுமக்களால் தாங்கிக்கொள்ள முடியாது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்.
ஆனால் அவ்வாறு செய்யாமல் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது. வரி அதிகரிப்பதை மக்கள் தாங்கிக்கொண்டாலும் அது தொடர்பில் மக்களிடம் எதிர்ப்பு இருக்கின்றது. வரி செலுத்துவதில் இருக்கும் வெறுப்பை காட்டிலும் வரி தொடர்பான நிர்வாகம் வலுவாக காணப்படாமையே இதற்கு காரணம்.
வரி அதிகரிப்பதானது அரச வருமானத்தை ஈட்டுவதற்காக மாத்திரம் முன்னெடுக்கப்படும் மாற்று வழி அல்ல. வரி அறவிடல் மற்றும் வரி செலுத்தல் நடவடிக்கையில் அனைவருக்கும் அது சமமாக பகிரப்படுகின்றது.
அதேநேரம் வரி செலுத்தாதவர்கள் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. அது தொடர்பிலும் அரசாங்கம் அவதானம் செலுத்தி நடவடிக்கை எடுக்கும்” இவ்வாறு அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
avan avan latcham latchamaa current bill vachcheekiranvol.
avanuala mothalla katta sollu…
nattu makkala nalla vachchi seiranuvol…