வாழ்வின் தத்துவங்கள் நிரம்பிய வரிகளை விட்டுச் சென்ற மகா கவிஞர்: மௌலானா ஜலாலுதீன் ரூமியின் 750வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அவரது போதனைகள் உலகளவில் எதிரொலிக்கின்றன

Date:

இஸ்லாமிய கவிஞரும், அறிஞருமான மெளலானா  ஜலாலுதீன் ரூமியின் 750ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அவரது பாரம்பரியத்தை போற்றும் வகையில், துருக்கியிலுள்ள கொன்யா மாகாணத்தில் உலகெங்கிலும் உள்ள மக்கள் ஒன்று கூடினர்.

ரூமி என்றழைக்கப்படும் 13ஆம் நூற்றாண்டின் கவிஞரும்அறிஞருமான மெளலானா  ஜலாலுதீன் அல்-ரூமியின் போதனைகள், ரூமியின் 22வது தலைமுறை வம்சாவளியைச் சேர்ந்த எசின் செலிபி பைரு (Esin Celebi Bayru) தலைமையில் சர்வதேச மெளலானா  அறக்கட்டளையால் உலகம் முழுவதும் பிரச்சாரம் செய்யப்படுகிறது.

இந்த உலகளாவிய முன்முயற்சியின் அடிப்படையில் ரூமியின் மறைவைத் தொடர்ந்து 750 வது ஆண்டையொட்டி துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனால் ‘மெளலானா  ஆண்டு” என பிரகடனப்படுத்தப்பட்டது.

இதேவேளை துருக்கியில் ஏற்பட்ட பேரழிவு நிலநடுக்கங்களால் அறக்கட்டளையின் விரிவான கொண்டாட்டத் திட்டங்கள் சீர்குலைந்தன.

இதன் பின்னர் அறக்கட்டளை தனது திட்டங்களில் தொடர்ந்து ஈடுபடுவதற்கு மாற்று வழிகளைக் கண்டறிந்து, அதன் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

ரூமியின் போதனைகளை உலகளவில் பரப்பும் வகையில் நெதர்லாந்து, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில்  ஆழமாக பின்னிப்பிணைந்த  சடங்கு, கருத்தரங்குகள் மற்றும்  விழாக்களை நடத்துதல், உலகளாவிய பயணங்களைத் தொடங்கியுள்ளனர்.

ரூமி தனது எழுத்துக்கள் மூலம் விதைத்த ஒற்றுமையின் விதைகளை விதைப்பதன் மூலம் உலகளாவிய நல்லிணக்கத்தை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

1207 ஆம் ஆண்டு முதல் 1273 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த ரூமி என்கின்ற மௌலானா ஜலாலுதீன் ரூமி பதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாரசீக கவிஞர். அரபு கவிஞர்களில் மிகவும் பிரபலமானவர் ரூமி. இந்திய அமீர் குஸ்ரோவின் (1253-1325) காலத்தை சேர்ந்தவர் .

ரூமி தனது படைப்புகளை தனது 50 ஆம் வயதிலிருந்துதான் எழுதத் தொடங்குகிறார்.இவரது படைப்புகள் பெரும்பாலும் பாரசீக மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. எனினும் துருக்கி, அரபு மற்றும் கிரேக்க மொழிகளையும் பயன்படுத்தியுள்ளார். ரூமியின் கவிதைகள் உலகின் பல நாடுகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

ரூமியின் கவிதைகள் பெரும்பாலும் காதலை கொண்டாடியது. ரூமி கொண்டாடிய காதல் ஆண் – பெண் இடையேயான காதல் மட்டும் அல்ல. அது இந்த பிரபஞ்சத்தின் மீது ஈர்ப்பு கொண்ட அனைத்தின் மீதான காதலாக இருந்தது.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...