குவைத் மன்னர் ஷேக் நவாப் அல்-அஹ்மத் அல்-சபாவின் மறைவையொட்டி அனுதாப புத்தகத்தில் கையெழுத்திடுவதற்காக குவைத் தூதரகத்தில் இன்று முதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய, குவைத் தூதரகத்தில் மூன்று நாட்களுக்கு தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்.
அதேநேரம் குவைத்தூதரகம் (ஞாயிறு, திங்கள், செவ்வாய்) மூன்று நாட்களுக்கு அனுதாப புத்தகத்தில் கையெழுத்திடுவதற்காக காலை 10.30 மணியிலிருந்து பிற்பகல் 2 மணி வரை வரை திறந்திருக்கும்.
குவைத்தின் மன்னர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-சபா, மூன்றாண்டுகள் ஆட்சியில் இருந்த நிலையில் அவர் தனது 86 ஆவது வயதில் காலமானார்.
குவைத் அரசின் மன்னர் ஷேக் நவாப் அல்-அஹ்மத் அல்-சபாவின் மறைவுக்கு மிகுந்த சோகத்துடனும், துக்கத்துடனும் இரங்கல் தெரிவித்துக் கொள்வதாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது.