பொதுஜன பெரமுன அமைப்பின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ திடீரென அமெரிக்கா சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி அவர் துபாய் வழியாக அமெரிக்காவில் உள்ள லொஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு புறப்பட்டு சென்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
அண்மையில் நடைபெற்ற பொதுஜன பெரமுன மாநாட்டில் அவர் தேசிய அமைப்பாளர் பதவியை விட்டு விலக தீர்மானித்ததையடுத்து அந்த பதவியை வெற்றிடமாக வைக்க கட்சி தீர்மானித்திருந்தது.
எனினும் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் தெரிவு செய்யப்பட்டார்.
அமெரிக்க பிரஜையான பசில் ராஜபக்சவின் பிள்ளைகள் அமெரிக்காவில் வசித்து வருவதுடன் அவருக்கு அந்த நாட்டில் சொந்த வீடு உட்பட ஏராளமான சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது.