வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இடையில் நாளை மறுதினம் (21) கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் விடுதலை தொடர்பிலும் இமயமலை பிரகடனம் தொடர்பிலும் இதன்போது கருத்துக்கள் பகிரப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, எதிர்வரும் ஜனவரி மாதம் 21 ஆம் திகதி புதிய தலைவரை தெரிவு செய்வதற்கு இலங்கை தமிழரசு கட்சியின் மத்தியகுழு தீர்மானம் மேற்கொண்டுள்ளது.