‘பாடசாலை மின் கட்டணத்தை பெற்றோர்கள் செலுத்த வைக்கும் சதி’

Date:

மாத்தறை மாவட்டத்தின் வலயக் கல்விப் பிரிவில் ஐந்து தேசிய பாடசாலைகள் உட்பட 22 பாடசாலைகளுக்கு மின்சாரம் வழங்கப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளின் மின்சாரக் கட்டணத்தை சம்பந்தப்பட்ட வலயக் கல்விப் பிரிவினால் செலுத்த வேண்டிய போதிலும், மாத்தறை வலயக் கல்விப் பிரிவு நிதிப் பற்றாக்குறையினால் கட்டணம் செலுத்தவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

பெற்றோர்களை பாடசாலை மின்கட்டணத்தை செலுத்த வைக்கும் அரசின் ஒருவித சதியாகவே இதை பார்க்கிறோம்.   மின்வெட்டால் பாடசாலைகளின் அனைத்து நடவடிக்கைகளும் தாமதமாகும்” என ஸ்டாலின் கூறியுள்ளார்.

மின் கட்டணத்தைச் செலுத்தாத கிராம அளவில் வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு மின் இணைப்பைத் துண்டிக்கத் தொடங்கியது. அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது சொந்த கிராமத்தில் இருந்து இந்த நிகழ்ச்சியை ஆரம்பித்தார்.

மின்சார கட்டணத்தை செலுத்தாத 800,000 நுகர்வோரின் மின்சாரம் ஏற்கனவே துண்டிக்கப்பட்டுள்ளது.

எனவே, உடனடியாக மின்சாரம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மாத்தறையில் இருந்து மின்கட்டணத்தை செலுத்த தொழிற்சங்க போராட்டம் நடத்தப்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...

உலக அமைதிக் குறியீட்டில் இலங்கை 14 இடங்கள் முன்னேற்றம்!

2026 உலகளாவிய அமைதிக் குறியீட்டில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தைப் பெற்றுள்ளதுடன், சமீபத்திய...

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...