அமேசன் உயர்கல்வி நிறுவனம் Amazon Campus ஆக கல்வி இராஜாங்க அமைச்சரினால் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
கொழும்பு 4 இல் அமைந்துள்ள அமேசன் உயர்கல்வி நிறுவனம் கடந்த 18 டிசம்பர் 2023 அன்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற வருடாந்த பட்டமளிப்பு விழாவில் ஆக கல்வி இராஜாங்க அமைச்சரினால் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் 120 Diploma மாணவர்கள் 50 HND மாணவர்கள் 150 பட்டதாரி மாணவர்கள் மற்றும் முதுமாணி மாணவர்கள் விருதுகளை பெற்றனர்.
இந்நிகழ்ச்சிக்கு பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் அவர்களும் பிரதி மாலைதீவுகள் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளின் இலங்கை உயர்ஸ்தானியர்களும் விசேட அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
இலங்கையின் தேசிய பல்கலைக்கழகங்களில் இருந்தும் சுமார் ஐந்து பேராசிரியர்கள் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி வைப்பதற்காக வருகை தந்தனர்.
தேசிய சிறுவர் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சானக உதயகுமார அமரசிங்க விசேட சொற்பொழிவு ஒன்றை நிகழ்த்தினார்.
கல்லூரியின் 35 விரிவுரையாளர்கள் 20 ஊழியர்களும் இணைந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர்.
சிறந்த விரிவுரையாளர்களுக்கான விருதுகளும் சிறந்த இணை நிறுவனத்திற்கான விருதுகளும் இந்நிகழ்வில் வழங்கப்பட்டன.
மாணவர்கள் பெற்றோர்கள் ஆகியோர் உட்பட 1000 க்கும் அதிகமானோர் இந்நிகழ்ச்சியை அலங்கரித்தனர் என அமேசான் கல்லூரியின் பணிப்பாளர் இல்ஹாம் மரிக்கார் அவர்கள் தெரிவித்தார்.
(எம்.யூ.எம்.சனூன்)