கண்டி, தெல்தோட்டை, பள்ளேகம உடபிட்டிய அல் ஹுஸ்னா மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் ஒன்று கூடல் நிகழ்வு எதிர்வரும 2023 டிசம்பர் மாதம் 25ம் திகதி திங்கட்கிழமை மாலை 6.30 மணிக்கு பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
குறித்த ஒன்றுகூடலின் போது 2024ம் ஆண்டுக்கான பழைய மாணவர் சங்கத்திற்கான புதிய உறுப்பினர்கள் தெரிவு செய்யும் நிகழ்வும், 2022 – 2023 விளையாட்டுத்துறை மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.
எனவே குறித்த ஒன்றுகூடலில் சகல பழைய மாணவர்களையும் தவறாது கலந்து கொள்ளுமாறு பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் பாடசாலையின் அதிபர் திரு. ஏ.எல். ஹைதர் அலி அவர்கள் அழைப்பு விடுக்கின்றார்.