மியன்மாரின் சைபர் கிரைம் முகாமில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்கும் முயற்சி தோல்வி!

Date:

மியன்மாரின் தொலைதூர எல்லைப் பகுதியில் உள்ள பிரபல சைபர் கிரைம் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மற்றும் சர்வதேச குடிமக்களை விடுவிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கை தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித கடத்தல் மற்றும் அரசு சாரா நிறுவனம் ஒன்றால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை,பலத்த பாதுகாப்புடன் கூடிய வளாகத்திற்குள் சிறைபிடிக்கப்பட்டவர்களை விடுவிக்கத் தவறியுள்ளதாக கூறப்படுகின்றது.

இலங்கையைச் சேர்ந்த 56 இளைஞர் யுவதிகள் தாய்லாந்து மற்றும் மியான்மார் எல்லைப் பகுதியில் உள்ள சைபர் கிரைம் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகின.

தாய்லாந்தின் தகவல் தொழில்நுட்பத் துறையில் இலாபகரமான வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொடுக்கும் வாக்குறுதிகளால் இவர்கள் அனைவரும் அழைத்து செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

சுமார் 56 இலங்கை இளைஞர்கள் மற்றும் யுவதிகள் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாள் ஒன்றுக்கு 15- 17 மணி நேரம் வேலை செய்யக் கட்டாயப்படுத்துவதாகவும், சரியாக உணவு வழங்கப்படுதில்லை எனவும் கூறப்படுகின்றது.

அத்துடன், கூண்டில் அடைத்து வைத்து துன்புறுத்துவதாகவும், அடிப்பதாகவும் அங்கிருந்து தப்பி வந்த ஒருவர் கூறியிருந்தார்.

மேலும் தங்களை விடுவிக்க 8000 அமெரிக்க டொலர்கள் கேட்கப்படுவதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில், அவர்களை மீட்பதற்கு மியன்மார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்பட்டது.

இந்நிலையிலேயே, நேற்று முன்னெடுக்கப்பட்ட மீட்பு நடவடிக்கை தோல்வியடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...