கட்சி தீர்மானித்தால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன்: மைத்திரி அறிவிப்பு

Date:

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுச் சபையில் தீர்மானிக்கப்பட்டால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தாம் போட்டியிட தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிங்கிரிய பிரதேச பிரதிநிதிகளுக்கான நியமனம், கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கிவைக்கப்பட்டது.

இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன.

அந்த வகையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இவர்களைத் தவிர பிரபல வர்த்தகர்களான திலித் ஜயவீர, தம்மிக்க பெரேரா மற்றும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) முன்னாள் தலைவர் ஜானக ரத்நாயக்க ஆகியோரும் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவுக்கு நான்கு நபர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் அறிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு...

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...