தண்ணீர் கட்டணத்தை செலுத்தாத ஏறக்குறைய ஒரு இலட்சம் பேரின் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.
அவ்வகையில், கடந்த ஒக்டோபர் மாதம் வரை கட்டணம் செலுத்தாத 95,000 க்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி அக்டோபர் 31ஆம் திகதியுடன் துண்டிக்கப்பட்ட குடிநீர் இணைப்புகளின் எண்ணிக்கை 95,241 ஆகும்.