ஜனாதிபதித் தேர்தலுக்கான முதல் கூட்டம் கொழும்பில்: ஐ.தே.கவின் பிரமாண்டமான ஏற்பாடு

Date:

2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி நாடு முழுவதும் பிரசாரக் கூட்டங்களை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் ஜனவரி 19ஆம் திகதி கொழும்பு மாவட்டத்தை மையமாகக் கொண்டு பிரதான கூட்டமொன்றை நடத்திய பின்னர் நாடு பூராகவும் கூட்டங்களை நடத்த ஐ.தே.க திட்டங்களை வகுத்துள்ளது.

கட்சியின் உயர்பீடக் குழுவுக்கான உறுப்பினர்கள் மற்றும் குழுக்களுக்கான உறுப்பினர்கள் அடுத்த மாதம் ஆரம்பத்தில் நியமிக்கப்படவுள்ளதாக கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் வாக்களிப்பு முகவர் நிலையத்துக்கு பொறுப்பானவர்களை நியமிக்கும் ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஆறு பிரதிநிதிகளை நியமிக்கவும் ஐ.தே.க திட்டமிட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் மாதத்தின் ஆரம்பத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்கான திட்டங்களை வகுத்து செயல்படுத்தும் விசேட அதிகாரமிக்க குழுவொன்றையும் ஐ.தே.க நியமிக்க உள்ளது. இதனை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ உறுதிப்படுத்தியுள்ளார்.

Popular

More like this
Related

இன்று இலங்கை வரும் வியட்நாம் ஜனாதிபதி

வியட்நாம் ஜனாதிபதி To Lam இன்றைய தினம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்....

பெரும்பாலான பகுதிகளில் மழை நிலைமை தொடரும்

இலங்கையை அண்மித்த தாழ் வளிமண்டல குழப்ப நிலை விருத்தியடைந்து வருவதால் எதிர்வரும்...

ஜனாதிபதி நிதியம்- ஜனசக்தி அறக்கட்டளை இடையே விசேட புரிந்துணர்வு ஒப்பந்தம்!

18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குக் கிடைக்கும் சுகாதார வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கில் ஜனாதிபதி...

வித்யா கொலை வழக்கு; குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு

2015-ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாடசாலை மாணவி சிவலோகநாதன்...