06 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு!

Date:

அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச தீர்மானித்துள்ளது.

இதன்படி, பின்வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதுடன், நுகர்வோர் இந்தப் பொருட்களை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி சிவப்பு பருப்பு, வெள்ளை நாட்டரிசி, வெள்ளை பச்சையரிசி என்பன தலா ஒரு ரூபா குறைக்கப்பட்டுள்ளது. மேலும் உருளைக்கிழங்கு, சிவப்பரிசி, ரின் மீன் என்பன 5 ரூபாவாலும் விலை குறைக்கப்பட்டுள்ளன .

இந்த விலை குறைப்பு 28 டிசம்பர் 2023 முதல் அமுலுக்கு வருகிறது.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் மழை நிலைமை தொடரும்

இலங்கையை அண்மித்த தாழ் வளிமண்டல குழப்ப நிலை விருத்தியடைந்து வருவதால் எதிர்வரும்...

ஜனாதிபதி நிதியம்- ஜனசக்தி அறக்கட்டளை இடையே விசேட புரிந்துணர்வு ஒப்பந்தம்!

18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குக் கிடைக்கும் சுகாதார வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கில் ஜனாதிபதி...

வித்யா கொலை வழக்கு; குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு

2015-ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாடசாலை மாணவி சிவலோகநாதன்...

சிறுவர்களின் டிஜிட்டல் பாதுகாப்பை உறுதி செய்யப் புதிய கொள்கை!

சிறுவர்கள் டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் சமூக ஊடகங்களை மேற்பார்வையின்றிப் பயன்படுத்துவதால் ஏற்படும்...