2024 ஆம் ஆண்டில் 3 வீத பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்க்க முடியுமென மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் ஊடகப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட ”2024 மற்றும் நாட்டின் பொருளாதாரம்” எனும் விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாட்டின் பணவீக்கத்தை 5 வீதமாக பேணுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மூன்று வீத பெறுமதி சேர் வரி (VAT) அதிகரிப்பின் மூலம் முறையற்ற வகையில் பொதுமக்களை பயன்படுத்த வேண்டாமென நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன வர்த்தக சமூகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.