இலங்கை காதி நீதிபதிகள் சம்மேளனத்தின் தலைவராக இஃப்ஹாம் யெஹியா அவர்கள் தெரிவு!

Date:

இலங்கையில் சுமார் 60இற்கும் மேற்பட்ட காதி நீதிமன்றங்கள் உள்ளன. இந்த நீதிமன்றங்கள் ஊடாக இலங்கையிலுள்ள முஸ்லிம்களின் குடும்பப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு தீர்வுகள் வழங்கப்படுவதுடன், விவாகரத்து விடயங்கள்  தொடர்பான விதிமுறைகளும் இதன் மூலம் வழங்கப்படுகின்றன.

இந்த அமைப்பின் மூலம், முஸ்லிம் சமூகத்தில் முஸ்லிம் குடும்பங்களின் குடும்பப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், இந்நாட்டின் நீதிமன்ற அமைப்பில் வழக்குகள் தேங்குவதைக் குறைப்பதற்கும் பெரும் பங்களிப்புச் செய்யப்படுகிறது.

ஆனால் இந்த அமைப்பு பற்றிய தெளிவின்மையால் பலரும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை வெளியிட்டு வருவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

இப்பினும் காதி நீதிமன்றங்கள் மூலம் முஸ்லிம் சமூகம் எந்தளவு பயன்பெற்று வருகிறது என்பதை நடுநிலை கண்ணோடு பார்க்கும் எவரும் ஏற்றுக்கொள்வர்.

அந்த வகையில் பல தசாப்தங்களாக பணியாற்றி வருகின்ற காதி நீதிமன்ற நீதிபதிகளின் சம்மேளனத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் அண்மையில் கண்டியில் நடைபெற்றது.

இச்சந்தர்ப்பத்தில் சம்மேளனத்தின் புதிய நிர்வாகக்குழு தெரிவு செய்யப்பட்டது.

இரத்தினபுரியில் சமூகப்பணிக்கு பெயர்போன மர்ஹும் யெஹியா ஹாஜியாரின் புதல்வர் இஃப்ஹாம் யெஹியா (BSc (UK), BBA (UK), LLB (R)) புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

ஏனைய நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பெயர் விபரம் வருமாரு.

செயலாளர்: (கொழும்பு மேற்கு) காதி  நீதிபதி எம்.எஸ்.எம். அம்ஹர்  AAL, LLB

பொருளாளர்: (பாணந்துறை) காதி  நீதிபதி அஷ்ஷேக் எம்.ஆர்.எம்.நைசர்.

1வது துணைத் தலைவர்: (கண்டி) காதி  நீதிபதி அஷ்ஷேக் ஏ.எல்.ஏ. அப்துல் கஃபார்.

2வது துணைத் தலைவர்:  (புத்தளம் மற்றும்  சிலாபம்) காதி  நீதிபதி – எம். றஹ்மத்துல்லா முகமது (Phd).

உதவிச் செயலாளர்: (குருநாகல்) காதி நீதிபதி ஏ.எச்.எஸ். இப்ராஹிம் ஷாஹிப் B.Com (HONS).

உதவி பொருளாளர்: (ஹம்பாந்தோட்டை) காதி நீதிபதி– பி.ஜலால்தீன் ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

காசா படுகொலைக்கு எதிராக சென்னையில் மாபெரும் போராட்டம்

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் மக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக சென்னையில் போராட்டம் நடைபெற்றது. பலஸ்தீனத்தில்...

வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை...

அஷ்ரப் மருத்துவமனையில் கட்டண வார்டை திறந்து வைத்த சுகாதார அமைச்சர்

கல்முனை அஷ்ரப் நினைவு மருத்துவமனையின் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு பகுதியாக...

“Disrupt Asia 2025”: டிஜிட்டல் பொருளாதாரமும் புத்தாக்கத்தையும் முன்னிறுத்தும் மாநாடு

நாட்டின் முன்னணி புதிய தொழில்முனைவோர் மாநாடு மற்றும் புத்தாக்க விழாவான “Disrupt...