பிரித்தானிய இளவரசி ஹேன் நாட்டுக்கு விஜயம்!

Date:

பிரித்தானியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான 75 வருட இராஜதந்திர உறவுகளை முன்னிட்டு நடத்தப்படும் நிகழ்வுகளின் ஒரு பகுதியாக பிரித்தானிய இளவரசி ஹேன் நாளை (புதன்கிழமை)  நாட்டுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இவர் மூன்று நாள் விஜயமாக பிரித்தானிய இளவரசி ஹேனின் இந்த பயணம் அமையவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்போது இளவரசி ஹேனுடனான இந்த விஜயத்தில் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சர் திமோதி லாரன்ஸும் கலந்துகொள்ளவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது இளவரசி கண்டி மற்றும் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு அங்குள்ள அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளார்.

மேலும், அவர் நாட்டில் இருக்கும் காலக்கட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட அரசியல் தலைவர்களையும் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை...

அஷ்ரப் மருத்துவமனையில் கட்டண வார்டை திறந்து வைத்த சுகாதார அமைச்சர்

கல்முனை அஷ்ரப் நினைவு மருத்துவமனையின் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு பகுதியாக...

“Disrupt Asia 2025”: டிஜிட்டல் பொருளாதாரமும் புத்தாக்கத்தையும் முன்னிறுத்தும் மாநாடு

நாட்டின் முன்னணி புதிய தொழில்முனைவோர் மாநாடு மற்றும் புத்தாக்க விழாவான “Disrupt...

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 6 மாகாணங்களில் இணைய சேவைக்கு தடை

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 6 மாகாணங்களில் ஃபைபர் ஆப்டிக் இணைய சேவைக்கு...