மன்னார் – மதவாச்சி பிரதான வீதியில் பொலிஸார் திடீர் சோதனை!

Date:

மன்னார் – மதவாச்சி பிரதான வீதி,குஞ்சுக்குளம் பிரதான சோதனைச் சாவடியில்  நேற்று (09) மாலை போதைப்பொருள் தொடர்பான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்திரபால  ஹேரத் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் பிரபாத் விதானகே தலைமையில் மடு பொலிஸ் பிரிவில் உள்ள குஞ்சுக்குளம் சோதனைச் சாவடியில் குறித்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மடு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசன்ன சில்வா தலைமையில் மடு பொலிஸ் நிலைய பொலிஸார் இணைந்து குறித்த போதைப்பொருள் தொடர்பான சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

இதன் போது மன்னாரில் இருந்து சென்ற வாகனங்கள், மற்றும் பரய நாளன் குளம் வீதியூடாக மன்னார் நோக்கி பயணித்த சகல வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

வாகனங்களில் பயணித்த மக்களுக்கு போதைப் பொருள் பரிசோதனை குறித்து அறிவித்தல்கள் வழங்கப்பட்டதன் பின்னர் சோதனை நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்தனர்.

மேலும் மோப்ப நாயின் உதவியுடன் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். எனினும் திடீர் நடவடிக்கைகளினால் குறித்த வீதியூடாக பயணித்த மக்களும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கற்பித்தலில் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் 10 முக்கிய சவால்கள் மற்றும் தீர்வுகள்

"கல்வி என்பது நீங்கள் உலகத்தை மாற்றப் பயன்படுத்தக்கூடிய மிக சக்திவாய்ந்த ஆயுதமாகும்"...

அத்தியாவசிய மருந்துகளுக்கு பற்றாக்குறை இல்லை: சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதி!

நாட்டின் வைத்தியசாலைகளில் அத்தியாவசிய மருந்துகளுக்கு எவ்வித பரவலான பற்றாக்குறையும் நிலவவில்லை என...

புத்தளம் திறந்த பல்கலைக்கழகத்தில் வெகுவிமர்சையாக நடந்த ‘Open Day 2026’!

புத்தளம் திறந்த பல்கலைக்கழக வளாகத்தில் ‘Open Day 2026’ வழிகாட்டல் மற்றும்...

இலங்கை பொருளாதார மீட்சியில் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது

தொடர்ந்து 12 காலாண்டுகளாக வளர்ச்சி கண்டதன் மூலம் இலங்கையின் பொருளாதாரம் நெருக்கடிக்கு...