TIN இலக்கம் கிடைக்காவிடின் உடனடியாக அறிவிக்கவும்!

Date:

யாருக்காவது TIN இலக்கம் கிடைக்காவிடின் அல்லது இலக்கத்தைப் பெறுவதில் ஏதேனும் சிக்கல்கள் இருப்பின் மாகாண உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு அல்லது பிரதேச செயலகத்திற்கு அறிவிக்க முடியும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர், பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

புதிய முறை ஒன்று அறிமுகப்படுத்தப்படும் போது ஆரம்ப காலத்தில் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுவது வழமையாகும்.

வரி செலுத்துவோர் (TIN) அடையாள எண்ணைப் பெறாததற்காக வழக்குத் தொடருதல் அல்லது நீதிமன்றத்திற்குப் பரிந்துரைப்பது போன்றவற்றில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை, மேலும் அதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

முறைசாரா அமைப்பை ஒரு முறையான அமைப்பிற்குள் கொண்டு வருவதை ஒரே இரவில் செய்ய முடியாது. தற்சமயம் பலர் TIN இலக்கத்தை பெற முயற்சிப்பது நல்ல விடயம்.

ஆனால், ஒரே தடவையில் பலர் தரவுகளை உட்படுத்த முயலும்போது அங்கு சில தாமதங்கள் ஏற்படலாம். இந்த சூழ்நிலைகள் சிறிது நேரத்தில் சீரமையும்.

எனினும், TIN இலக்கம் பெற்ற அனைவரும் வரி செலுத்த வேண்டியதில்லை, அந்த வரிக்கு உட்பட்டவர்கள் மாத்தரமே வரி செலுத்த வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

கற்பித்தலில் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் 10 முக்கிய சவால்கள் மற்றும் தீர்வுகள்

"கல்வி என்பது நீங்கள் உலகத்தை மாற்றப் பயன்படுத்தக்கூடிய மிக சக்திவாய்ந்த ஆயுதமாகும்"...

அத்தியாவசிய மருந்துகளுக்கு பற்றாக்குறை இல்லை: சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதி!

நாட்டின் வைத்தியசாலைகளில் அத்தியாவசிய மருந்துகளுக்கு எவ்வித பரவலான பற்றாக்குறையும் நிலவவில்லை என...

புத்தளம் திறந்த பல்கலைக்கழகத்தில் வெகுவிமர்சையாக நடந்த ‘Open Day 2026’!

புத்தளம் திறந்த பல்கலைக்கழக வளாகத்தில் ‘Open Day 2026’ வழிகாட்டல் மற்றும்...

இலங்கை பொருளாதார மீட்சியில் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது

தொடர்ந்து 12 காலாண்டுகளாக வளர்ச்சி கண்டதன் மூலம் இலங்கையின் பொருளாதாரம் நெருக்கடிக்கு...