அரச வைத்தியர்களுக்கு ரூ.35,000 உதவித்தொகை வழங்க முடிவுசெய்துள்ள நிலையில், சுகாதார ஊழியர்களுக்கும் குறித்த ஊக்கத்தொகையை வழங்க வேண்டுமென வலியுறுத்தி சுகாதார ஊழியர் தொழிற்சங்கங்கள் 48 மணிநேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று காலை முதல் சுகாதார ஊழியர்கள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் (PHIU) மற்றும் பிற தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் இந்த வேலைநிறுத்தத்தின் ஊடாக அமைச்சரவை முடிவில் மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டும் என சுகாதார ஊழியர்கள் மேலும் வலியுறுத்தியுள்ளனர்.