முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், இலங்கை ஹஜ் குழுவுடன் இணைந்து 2024 ஆம் ஆண்டுக்கான ஹஜ் கடமையினை நிறைவேற்ற உத்தேசித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்களை கோரியிருந்தது.
அதற்கமைய இந்த ஆண்டு 3500 வீசாக்கள் கிடைக்கப்பெற்றதுடன் இந்த வீசாக்களை 2024 ஏப்ரல் மாதத்திற்குள் பூரணப்படுத்துமாறு சவூதி அரசு இலங்கை ஹஜ் குழுவை பணித்துள்ளது.
இதனடிப்படையில் இதுவரை 3000 பேர் திணைக்களத்தில் பதிவு செய்துள்ளனர்.
இன்னும் 500 பேருக்கான பதிவே எஞ்சியுள்ளதால் 2024 ஆம் ஆண்டு ஹஜ் கடமையினை நிறைவேற்ற உத்தேசித்துள்ளவர்கள் உடனடியாக தங்களது பதிவை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள இணையத்தளத்தினூடாக (online) மூலம் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.